ETV Bharat / state

பின்னலாடைத் தொழிலாளர்களின் தேவை குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டம்! - பின்னலாடை தொழிலாளர்கள்

திருப்பூர்: ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்ட பின்னலாடைத் தொழில் துறையினை சீர்செய்ய எந்தவித உதவிகள் தேவை என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னலாடை தொழிலாளர்களில் தேவை குறித்து நடந்த ஆலோசனை கூட்டம்!
Dress exports
author img

By

Published : Jun 26, 2020, 2:20 AM IST

திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பின்னலாடைத் தொழில் துறையினருடனான ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "ஏற்கெனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பின்னலாடைத் தொழில் துறையினர், கடந்த மூன்று மாத ஊரடங்கு காலத்தில் மிகவும் நலிவடைந்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் அவற்றை மீட்டு கொண்டுவர எத்தகைய உதவிகள் தேவை என்பது குறித்து தொழில் துறையினருடன் கேட்டறிந்து, அவற்றை தொகுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப இருக்கின்றோம்.

90 விழுக்காடு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகின்ற திருப்பூர் பின்னலாடைத் துறையினை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.