ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை இருந்துவருகிறது. குழந்தை சுஜித்துக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் களத்தில் தொடர்ந்து இருக்கின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் சுஜித் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சுஜித் குடும்பத்தினர் அழுததையோட்டி குழந்தையை எப்படியும் மீட்புப்பணியினர் மீட்டுத்தருவார்கள் என ஜோதிமணி நம்பிக்கையூட்டினர்.
இதையும் படிங்க: புயலாக வேலை செய்து 15 நிமிடங்களில் பழுதை சரிசெய்த மீட்பு பணியாளர்கள்!