ETV Bharat / state

மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் மோடி உரையில் இல்லை: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

திருச்சி: மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் எந்தத் திட்டங்களையும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடவில்லை என்று திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

thirunavukkarasar
thirunavukkarasar
author img

By

Published : May 14, 2020, 9:26 AM IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. திருநாவுக்கரசர், "மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்குகின்றன. மாநில அரசு ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு, ஒரு ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாய் கொடுத்திருந்தால் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவாகும். மது விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மூன்று மாத ஊரடங்கிற்கு 1,000 ரூபாய் என்பது மிகவும் குறைவு.

அதேபோல் பிரதமர் மோடியின் உரையில் மக்களுக்கு எவ்வித பயனளிக்கும் அறிவிப்புகளோ, திட்டங்கள் எதுவுமில்லை. 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டிலுள்ள மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாயை மத்திய அரசு வழங்கினால் மொத்தமே ஒரு லட்சம் கோடி ரூபாய்தான் செலவாகும். தமிழ்நாட்டில் பலவீனமான அரசு இருப்பதுதான் இதற்கு காரணம். மோடிக்கு பயந்து செயல்படும் ஆட்சியாக எடப்பாடி அரசு உள்ளது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

ஆனால், மதுக்கடைகளை மூடியது தவறு என்று கார்த்தி சிதம்பரம் கூறியது அவரது சொந்த கருத்து ஆகும். அவர் வெளிநாட்டில் பயின்றவர். அந்த கலாசாரத்திற்கு ஏற்ப அவர் கூறியிருக்கலாம். எனது கருத்து பூரண மதுவிலக்குதான். அதனால் மதுக்கடைகளை திறப்பதற்காக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது சரியல்ல" என்றார்.

திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், "வெளிநாடுகளில் தமிழர்கள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். 50, 60 நாள்களாக அவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களை மீட்க அரசு கவனம் செலுத்தாத நிலை உள்ளது. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்க வேண்டும். அதேபோல் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த வலியுறுத்தி பெற்றோருக்கு இ மெயில் அனுப்பப்படுகிறது.

வாய்மொழி உத்தரவு இல்லாமல் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்து அரசு ஆணை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகையான 20 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு ஏமாற்றம் அளிக்கின்றது' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.