ETV Bharat / state

"சதுரங்க வேட்டை" பட பாணியில் இயங்கும் எம்எல்எம் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அலுவலர்கள் சோதனை - ஜிஎஸ்டி அலுவலர்கள் நடத்தும் அதிரடி சோதனை

திருச்சி: "சதுரங்க வேட்டை" பட பாணியில் தொழில் செய்துவரும் தனியார் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

mlm company
mlm company
author img

By

Published : Jan 21, 2020, 12:17 PM IST

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் என்ற எம்எல்எம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மளிகை பொருட்கள், பாத்திரங்கள், புடவைகள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றை எம்எல்எம் மூலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் வருவதுபோல் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி பல்வேறு திட்டங்களில் உறுப்பினர்களை சேர்த்து தொழில் செய்து வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகி அதிகமாக முதலீடு செய்து வருவதால், தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா, ரமேஷ் குமார் ஆகியோர் அறம் மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில வர்த்தக பிரிவு நிர்வாகிகளாகவும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இந்நிறுவன அலுவலகத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

சோதனை நடத்தும் ஜிஎஸ்டி அலுவலர்கள்

மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள்

சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே எல்ஃபின் நிறுவனத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். மக்களவைத் தேர்தலின் போது இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் குமாருக்கு சொந்தமான காரில் கட்டுக்கட்டாக பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Intro:திருச்சியில் "சதுரங்க வேட்டை" திரைப்பட பாணியில் தொழில் செய்துவரும் தனியார் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். Body:திருச்சி:
திருச்சியில் "சதுரங்க வேட்டை" திரைப்பட பாணியில் தொழில் செய்துவரும் தனியார் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இவர்கள் மளிகை பொருட்கள், பாத்திரங்கள், புடவைகள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றை எம்எல்எம் மூலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவதுபோல் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி பல்வேறு திட்டங்களில் உறுப்பினர்களை சேர்த்து தொழில் செய்து வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகி கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். இந்த வர்த்தக நிறுவனத்தில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா, ரமேஷ் குமார் ஆகியோர் அறம் மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பையும் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ் குமார் ஆகியோர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில வர்த்தக பிரிவு நிர்வாகிகளாக உள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்நிறுவன அலுவலகத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே என் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ்குமாருக்கு த சொந்தமான காரில் கட்டுக்கட்டாக பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.