ETV Bharat / state

நீர்நிலைகள் தூர்வாரும் பணியை தொடக்கி வைத்த அமைச்சர்கள்

திருச்சி: கிராமப் பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடங்கி வைத்த அமைச்சர்கள்
தொடங்கி வைத்த அமைச்சர்கள்
author img

By

Published : May 23, 2020, 11:30 PM IST

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மேக்குடியில் உள்ள கோட்டை வாய்க்காலில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் 3.60 கி.மீ தூரத்திற்கு ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அரசின் அத்தியாவசியப் பணிகளை தொடரலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவை சிறப்புத்திட்டத்திலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள குடிமராமத்துத் திட்டத்திலும் புனரமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் 20 விதமான பணிகள் ரூ.1.76 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மேக்குடி, பழுர் கிராமங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ள கோட்டை வாய்க்கால் வடிகால் தூர்வாரும் பணி தொடங்கிவைக்கப்பட்டது. கோட்டை வாய்க்கால் வடிகால் பிச்சாவரம் கிராமத்தில் தொடங்கி மேக்குடி, பழுர் வழியாக சுமார் 4 கி.மீ தொலைவு சென்று கொடிங்கால் வடிகாலில் கலக்கிறது.

அதன் பின்னர் ராமவாத்தலை, புதுவாத்தலை பிராதன வாய்க்காலிருந்து பிரியும் கிளைவாய்க்கால்களின் உபரி நீரும், மழைநீரும் ஒன்றாக சேர்ந்து கோட்டை வாய்க்கால் வடிகாலில் கிடைக்கப்பெறுகிறது. இந்த வடிகால் மூலம் கிடைக்கப்பெறும் உபரி நீர், மழைநீர் மூலம் சுமார் 300 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன.

இந்த கோட்டை வாய்க்கால் வடிகாலில் மேடுகளாகவும், செடி கொடிகள் முளைத்தும், கரைகள் தாழ்வாகவும், குறுகியும் உள்ளதால் மழைத்தண்ணீர் முழுவதும் வடிகாலின் இருபக்கமும் வழிந்து சென்று நெற்பயிர்களுக்கு சேதத்தினை ஏற்படுத்துகிறது. தற்போது எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணமும் கோட்டை வாய்க்கால் வடிகால் தூர்வாரப்படுகிறது.

இதையும் படிங்க: வேகத்தடை அமைத்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் - 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.