ETV Bharat / state

உ.பி., சாமியாரால் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவ முடியுமா..? - அமைச்சர் கே.என்.நேரு அதிரடி! - education minister anbil mahesh poyyamozhi

வ.உ.சிதம்பர பிள்ளையின் 152வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி யின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வ.உ.சிதம்பர பிள்ளையின் 152வது ஜெயந்தி விழா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 8:11 PM IST

Updated : Sep 5, 2023, 8:23 PM IST

வ.உ.சிதம்பர பிள்ளையின் 152வது ஜெயந்தி விழா

திருச்சி: வ.உ.சிதம்பர பிள்ளையின் 152வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி யின் முழு திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மாநகரில் போர்வெல் எங்குப் போட்டாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின் மூலமாக பொது மக்களிடம் சமாதானம் செய்து சரி செய்யப்படும். மாற்று ஏற்பாடு ஏதேனும் இருந்தால் அந்த மாற்று ஏற்பாடுகளும் செய்வோம். திருச்சி மாநகராட்சி சாலையில் முதல் கட்ட சாலை தான் போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சாலை போடப்பட்ட பின் சாலை நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் கூட்டணியில் உள்ளவர்களே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதெல்லாம் ஒரு பேச்சா" என்று கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் கேள்வியைப் புறந்தள்ளினார். அதனைத் தொடர்ந்து, உ.பி மாநிலத்தில் உள்ள சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி என அறிவித்திருக்கிறார், இது குறித்து உங்கள் கருத்து எனக் கேட்கப்பட்டதற்கு, "10 கோடி அல்ல பத்து ரூபாய் கொடுத்தால் சீப்பு வாங்கி தலையைச் சீவிக் கொள்வேன். அவரால் சீவ முடியுமா?...என்று இதற்கு அமைச்சர் உதயநிதியைப் பதில் சொல்லிவிட்டார்.

எங்களுடைய கொள்கை தந்தை பெரியாருடைய கொள்கை. எல்லா மக்களும் சமம் என்ற கொள்கை முறையிலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். அதை எதிர்க்கின்ற கொள்கையை வேர் அறுப்போம். கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளது. அனைவரும் ஒன்றாகவா இருப்பார்கள்...?கொள்கை மாறுபாடு இருக்கத்தான் செய்யும். கொள்கை மாறுபாடு இருப்பதெல்லாம் என்கிட்ட கேட்கிறீர்களே...வ.உ.சியை பற்றிக் கேளுங்கள்" என்று நக்கலாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

முன்னதாக, வ.உ.சி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வ.உ.சி.யின் பெருமைகள் குறித்துப் பேசினார். அப்போது, "வ.உ.சி ஒரு அமைப்புக்கான சொந்தம் அல்ல. இந்தியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டு முதல்வரிடம் எனக்கு வந்த உத்தரவில் முதல் உத்தரவு வ.உ.சி குறித்து அரிய பல தகவல்களைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று தான்.

அந்தப் புத்தகத்தையும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிட்டு இருக்கிறோம். 1968ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் 10 சிலைகள் வைக்கப்பட்டது. அதில் முக்கியமான சிலை வ.உ.சி சிலை. சமீபத்தில் அவர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டின் மேல் பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து வியந்தேன். அவரின் பிறந்த நாளான இன்று நாம் வேற்றுமையில் ஒற்றுமை என ஒரு நாடாக நாம் இருக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சசிகலா, இளவரசிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!

Last Updated : Sep 5, 2023, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.