ETV Bharat / state

அரசியல் வெற்றிடத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிரப்பிவிட்டனர்: அமைச்சர் கடம்பூர் ராஜு

திருச்சி: தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நிரப்பிவிட்டனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

kadambur raju
author img

By

Published : Nov 8, 2019, 11:42 PM IST

Updated : Nov 9, 2019, 6:59 AM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படவுள்ள இடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, டிஆர்ஓ சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைந்த தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் மணிமண்டபங்கள் அமைத்து பெருமை சேர்த்துவருகிறார். தமிழ்நாட்டில் 69 மணிமண்டபங்கள், ஐந்து அரங்கங்கள், நான்கு நினைவுச் சின்னங்கள், ஒரு நினைவுத் தூண் ஆகியவை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.

கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

சென்னை காந்தி மண்டபத்தில்தான் பல தலைவர்களின் மணிமண்டபங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் ஒரே இடத்தில் மூன்று மணிமண்டபங்கள் அமைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் ஆளுமையை யாராலும் ஈடுகட்ட முடியாது. அவரது அரசியல் வாரிசுகளாக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இரு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. ரஜினி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து" என்றார்.

இதையும் படிங்க: ’காவி’ நிறத்திற்கு புதிய விளக்கம் அளிக்கும் வானதி சீனிவாசன்!

Intro:தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நிரப்பி விட்டனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்Body:குறிப்பு :இதற்கான விஷுவல் விரைவில் அனுப்பி வைக்கப்படும் ....

திருச்சி:
தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நிரப்பி விட்டனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பகவதர், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படவுள்ள இடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, டிஆர்ஓ சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது கடம்பூர் ராஜு செய்தியாளரிடம் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைந்த தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபங்கள் அமைத்து பெருமை சேர்த்து வருகிறார். தமிழகத்தில் 69 மணிமண்டபங்கள், 5 அரங்கங்கள், 4 நினைவுச் சின்னங்கள், ஒரு நினைவுத் தூண் ஆகியவை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மெரினா கடற்கரையில் 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் இந்த நினைவிடம் அமையும். போயஸ் கார்டன் நினைவிடமாக்கும் பணி 32 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரிகிறது. ராமசாமி படையாச்சி நினைவிடம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் நினைவிடம் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா சிலையுடன் கூடிய நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த வகையில் திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். மறைந்த தென்னிந்திய முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், மறைந்த முன்னாள் நிதியமைச்சர் ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.
இதில் பெரும்பிடுகு பேரரசருக்கு முழு வெங்கல சிலையுடன் கூடிய நூலகம் அடங்கிய நினைவிடம் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. ஏ.டி பன்னீர்செல்வம் மற்றும் தியாகராஜ பாகவதர் நினைவிடங்கள் தலா 52 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை காந்தி மண்டபத்தில் தான் பல தலைவர்களின் மணிமண்டபங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் ஒரே இடத்தில் மூன்று மணி பண்டங்கள் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் ஆளுமையை யாராலும் ஈடு கட்ட முடியாது. அவரது வாரிசுகளாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.
அவர்கள் நல்ல ஆளுமையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ரஜினி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. திரைப்படங்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் பணி பொங்கல் முதல் நடைமுறைக்கு வரும் என்றார்.Conclusion:
Last Updated : Nov 9, 2019, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.