திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேவுள்ள தெற்கு அம்மாபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (40). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்துவருகிறார். இவர், நேற்று (ஜன. 28) தனது இருசக்கர வாகனத்தில் பால் எடுத்துக்கொண்டு தேக்கமலை கோவில்பட்டி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திருச்சியிலிருந்து திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பெருமாள் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வையம்பட்டி காவல் துறையினர், படுகாயமடைந்த பால் வியாபாரியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் வெடித்து விபத்து: 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசம்!