ETV Bharat / state

சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு உறுப்பினர்கள் திருச்சியில் ஆய்வு

திருச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு உறுப்பினர்கள் அரசு சார்ந்த இடங்களில் இன்று (நவ-24) ஆய்வு மேற்கொண்டனர்.

Etv Bharatதமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழு உறுப்பினர்கள் திருச்சியில் ஆய்வு

author img

By

Published : Nov 24, 2022, 2:09 PM IST

திருச்சி: சட்டமன்ற பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (நவ-24)ஆய்வு செய்கின்றனர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் குழுவின் உறுப்பினர்களான வேல் முருகன், சிந்தனைச்செல்வன், சரஸ்வதி உள்ளிட்டோர் இருந்தனர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளுக்கு நேரடியாக சென்ற பொது கணக்குக் குழு மருத்துவ சிகிச்சை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நிறை, குறைகளைக் கேட்டறிந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு உறுப்பினர்கள் திருச்சியில் ஆய்வு

இதனைத்தொடர்ந்து கோ - அபிஷேகபுரம் பகுதியில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் கீழ் பணியாற்றும் பெண்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்தக் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க:பொறியியல் கலந்தாய்வு நிறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.