திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி பூச்சொரிதல், காப்பு கட்டுதலுடன் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
பால்குடம் உற்சவமானது அருள்மிகு இரட்டை விநாயகர் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால்குடங்கள் புறப்பட்டு அரண்மனை மற்றும் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பகவதி அம்மன் கோயிலை வந்தடைந்தது. இதில் குழந்தைகள் பெண்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அக்னி சட்டி மற்றும் அலகு குத்தியும், பக்தர்கள் கோயிலை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர்.