புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சுதந்திராபுரத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் சசிகலா (28). இவர் திருச்சி மிளகு பாறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்துள்ளார். அப்போது சசிகலாவிற்கும் சரவணன் (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சரவணன் தனது காதலி சசிகலாவிடமிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி அடகு வைத்துள்ளார். அதனை மீட்டுத் தருமாறு சசிகலா தொந்தரவு செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சரவணன், நண்பர்கள் இருவருடன் இணைந்து 2013 டிசம்பர் 15ஆம் தேதி தன் காதலியை கொலை செய்தார்.
இவ்வழக்கு திருச்சி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சரவணன், மாரிமுத்து ஆகிய இரண்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், சத்யாவிற்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.