ETV Bharat / state

காவல் துறைக்கு அஞ்சி வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.!! - போலீசுக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி - வாலிபர் பலி

திருச்சி: அரியமங்கலத்தில் காவல் துறைக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.

போலீசாருக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி வாலிபர் பலி
author img

By

Published : Sep 17, 2019, 9:42 PM IST

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவரது மகன் கார்த்திக்கேயன் (29) திருமணம் ஆகாதவர். இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை பணி நிமித்தமாக கலைஞர் அறிவாலயம் பகுதியில் இருந்து திருச்சி & கரூர் பைபாஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் தருமபுரியில் இருந்து டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி அதே சாலையில் வந்து கொண்டிருந்தது.

போலீசுக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி - வாலிபர் பலி

கோஹினூர் தியேட்டர் சிக்னல் அருகே லாரியை அப்பகுதியில் நின்ற காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் லாரியை டிரைவர் வேகமாக ஓட்டினார். இதில் முன்னால் சென்ற கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விரைந்து வந்து கார்த்திக்கேயன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

Intro:போலீசாருக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Body:திருச்சி:

போலீசாருக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவரது மகன் கார்த்திக்கேயன் (29). திருமணம் ஆகாதவர். இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை பணி நிமித்தமாக கலைஞர் அறிவாலயம் ப குதியில் இருந்து திருச்சி&கரூர் பைபாஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இவருக்கு பின்னால் தர்மபுரியில் இருந்து டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி அதே சாலையில் வந்து கொண்டிருந்தது. கோஹினூர் தியேட்டர் சிக்னல் அருகே லாரியை அப்பகுதியில் நின்ற போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள மாலை நேரத்தில் கனரக வாகனங்கள் நகர எல்லைக்குள் வர தடை உள்ளது. இதை மீறி வந்த லாரியை போலீசார் தடுத்த நிறுத்த முயற்சித்த போது லாரியை டிரைவர் வேகமாக ஓட்டியுள்ளார்.

இதில் முன்னால் சென்ற கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து கார்த்திக்கேயன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துமவனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாருக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி வாலிபர் இறந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Conclusion: போலீசாருக்கு பயந்து வேகமாக இயக்கப்பட்ட லாரி மோதி வாலிபர் இறந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.