திருச்சி: ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் இயங்கி வரும் பழச்சாறு கடையில் உறையூரைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் பழச்சாறு அருந்தியுள்ளார். அப்போது பழச்சாற்றில் பல்லி இருந்ததைக் கண்டறிந்தவர், உடனடியாக காவல் நிலையத்துக்கும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தற்போது அவர் முதலுதவி சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பழக்கடையில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கு உள்ள பழங்கள் அழுகிய நிலையில் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது.
கடையிலிருந்து அழுகிய பழங்கள் அழிக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பழச்சாறு கடைக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.
இதையும் படிங்க: திருச்சி மாவட்ட அதிமுகவில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி