திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (36). இவர் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்வதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து 53 வெளிமாநில மதுபாட்டில்கள், 34 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
மேலும் பழையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமன் (20), துரைசாமி (49), பழனிச்சாமி (35), தமிழ்செல்வன் (30). இவர்கள் நால்வரும் பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பணம் வைத்து சூதாடியுள்ளனர்.
இது தொடர்பாக நால்வரையும் கைதுசெய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவிலிருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த மூன்று பேர் கைது!