ETV Bharat / state

உயிருக்கு பயந்து தலைக்கவசம் அணியுங்கள் - நீதிபதி நந்தினி

திருச்சி: இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் உயிருக்கு பயந்து தலைக்கவசம் அணிவது நல்லது என்று நீதிபதி நந்தினி தெரிவித்தார்.

judge nandini
author img

By

Published : Sep 26, 2019, 11:06 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர் நீதிபதி நந்தினி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எம்.கலையரசி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது நீதிபதி நந்தினி பேசுகையில், தலைக்கவசம், மாணவ மாணவியர்களுக்கு சட்டம் தரும் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஆகியவை குறித்து விளக்கமளித்தார். மேலும், தொலைபேசியால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

Intro:உயிருக்கு பயந்து தலைக்கவசம் அணியுங்கள் - சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர் நீதிபதி நந்தினி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான கே.எம்.கலையரசி கலந்து கொண்டனர்.பின்னர் மாணவ மாணவியர்களுக்காக நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் பேசிய நீதிபதி நந்தினி, 18 வயதுக்கு குறைவானர்கள் இருசக்கர வாகனம் இயக்க கூடாது, கைபேசியினை அதிகமாக பயன்படுத்தக்கூடாது, கல்வியில் விருப்பம் கொண்டு படிக்க வேண்டும், குழந்தை திருமணங்களை ஆதரிக்க கூடாது, மாணவ மாணவியர்களுக்கு சட்டம் தரும் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்கள்.

முகாமில் மூத்த வழக்குரைஞர்கள் பலர் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் வே.வேல்முருகன் மற்றும் சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.