ETV Bharat / state

''நான் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிபெறுவேன்''-  லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன்!

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன், திருச்சி கொண்டு வரப்பட்டபோது, 'தான் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிபெறுவேன்' என கூறியுள்ளது பல்வேறு தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

lalitha-jewellery-theft-gangleader-murugan-in-trichy-central-jail

author img

By

Published : Nov 27, 2019, 8:02 AM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் லலிதா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. அதில் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் சுவரை ஓட்டை போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது தெரிய வந்ததையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சுரேஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சுரேஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் பிரபல கொள்ளையன் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து முருகனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார். பின்னர் அவரை சிறையில் அடைத்த காவல் துறையினர், கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றங்கரையில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பெங்களூரு காவல் துறையினர் அவனை அழைத்து வந்து புதைக்கப்பட்ட நகையை மீட்டு, பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தத் தகவல் திருச்சி காவல் துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து, பெங்களூரு காவல் துறையினரை பெரம்பலூர் அருகே வழிமறித்து மீட்கப்பட்ட நகைகள் குறித்த விபரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி காவல் துறையினர் முடிவு செய்து முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் முருகனிடம் விசாரணை மேற்கொள்ள திருச்சி மாவட்ட குற்றவியல் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் திரிவேணி அனுமதியளித்தார். இந்த உத்தரவை பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவித்து, முருகனை திருச்சிக்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர்.

பின்னர் திருச்சி காஜாமலை அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசிக்கும் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் முன்பு முருகனை காவல் துறையினர் இன்று அதிகாலை ஆஜர் படுத்தினர். அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முருகனை காவலில் எடுக்கக் கோரும் மனுவை நீதிமன்றத்தில் நாளை காவல் துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையில் திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும் போது முருகன் செய்தியாளரிடம், ' எனக்கு நிறைய திறமை உள்ளது. நான் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவேன். நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன். நான் ஒரு நல்ல படத் தயாரிப்பாளர். என் வாழ்க்கையில் சிறை அனுபவம் நிறைய உள்ளது' என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முருகன்

நாளை காவல் துறையினர் முருகனை காவலில் எடுத்தால், பல்வேறு வழக்குகள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: 12 கிலோகிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!

Intro:திருச்சியில் கொள்ளையிடும் முருகன் ஆஜர்Body:

திருச்சி:
"எனக்கு நிறைய திறமை உள்ளது" என்று திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபல லலிதா ஜுவல்லரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வைரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் சுவரை ஓட்டை போட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையில்
திருவாரூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சுரேஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் லலிதா ஜுவல்லரி கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுரேஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் பிரபல கொள்ளையன் முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தான். அவனை சிறையில் அடைத்த போலீசார் மீண்டும் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றங்கரையில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பெங்களூர் போலீசார் அவனை அழைத்து வந்து புதைக்கப்பட்ட நகையை மீட்டு பெங்களூர் அழைத்துச் சென்றனர். அப்போது திருச்சி போலீசாருக்கு இந்த தகவல் கிடைத்து, அவரை பெரம்பலூர் அருகே வழிமறித்து மீட்கப்பட்ட நகைகள் குறித்த விபரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர். இந்நிலையில் முருகனை கஸ்டடி எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முடிவு செய்தனர். இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். ம முருகனிடம் விசாரணை மேற்கொள்ள திருச்சி மாவட்ட குற்றவியல் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் திரிவேணி அனுமதி அளித்தார். இதையடுத்து இவரது உத்தரவை பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவித்து, பின்னர் பெங்களூர் சிறை நிர்வாகத்திடம் திருச்சி போலீசார் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் இன்று பெங்களூருவில் இருந்து முருகனை அழைத்து வந்த போலீசார் திருச்சி காஜாமலை அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசிக்கும் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் முன்பு இன்று இரவு ஆஜர்படுத்தினர். அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முருகனை கஸ்டடி எடுக்க கோரும் மனுவை நீதிமன்றத்தில் நாளை போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர். அதன்பின்னரே அவர் எத்தனை நாள் கஸ்டடி எடுக்க படுகிறார் என்பது தெரியவரும். இதற்கிடையில் திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தும் போது முருகன் செய்தியாளரிடம் கூறுகையில், எனக்கு நிறைய திறமை உள்ளது. நான் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவேன். நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன். நான் ஒரு நல்ல பட தயாரிப்பாளர்.
என் வாழ்க்கையில் சிறை அனுபவம் நிறைய உள்ளது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.