ETV Bharat / state

முக்கொம்பு சுற்றுலா மையத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு! - trichy news

திருச்சி: முக்கொம்பு சுற்றுலா மையத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி செய்திகள்  முக்கொம்பு சுற்றுலா மையம்  lady dead body  trichy mukkombu
முக்கொம்பு சுற்றுலா மையத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு
author img

By

Published : Jul 21, 2020, 8:58 AM IST

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்திலுள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் உடல் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜீயபுரம், டிஎஸ்பி கோகிலா, காவல் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அப்பெண்ணின் சடலத்தில் மேலாடை இல்லாமல் இருந்துள்ளது. இதனால், காவல் துறையினர் இது கொலையாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

மேலும், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் அமூர் பகுதியைச் சேர்ந்த கனகாம்புஜம்(50) என்பதும் இவர், திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள தனியார் மகளிர் கல்லூரி உணவுக்கூடத்தில் சமையலராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இவருடைய கணவர், மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சீட்டுப் பணம் செலுத்தாத பெண்ணிற்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.