ETV Bharat / state

காணாமல்போனோரை கண்டுபிடிக்காமல் அலட்சியம்காட்டிய காவல் துறை: கூலித்தொழிலாளி தீக்குளிப்பு - காணாமல்போனவர்களை கண்டுபிடிக்காமல் அலட்சியம் காட்டிய போலீஸ்

திருச்சி: ஒராண்டுக்கு முன்பு மாயமான மனைவி, மகன்களைக் கண்டுபிடித்துத் தராததால் உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் தொழிலாளி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலித்தொழிலாளி தீக்குளிப்பு
கூலித்தொழிலாளி தீக்குளிப்பு
author img

By

Published : Mar 20, 2021, 12:12 PM IST

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிபாளையம் மேற்கு குறும்பர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் சோலை ஈஸ்வரி (44). இவர்களது மகன்கள் துர்கேஷ் (8), நித்திஷ் (7). 2019 டிசம்பர் 22ஆம் தேதி ஈஸ்வரி, இரு மகன்கள் திடீரென மாயமாகினர். அவர்களைக் கண்டுபிடித்து தரக்கோரி செல்வராஜ் உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரளித்து ஓராண்டாகியும் காணாமல்போனவர்களைக் காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து விசாரிப்பதற்காக செல்வராஜ் இன்று காலை 7.30 மணியளவில் உப்பிலியாபுரம் காவல் நிலையம் வந்தார். அப்போது பெரும்பாலான காவல் அலுவலர்கள் வீரப்பூர் திருவிழா பாதுகாப்பிற்குச் சென்றுவிட்டனர்.

இதனால் ஒரு சில காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இதையடுத்து காவலர்களிடம் விசாரித்த செல்வராஜுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த செல்வராஜ் காவல் நிலையத்தின் பின்புறம் சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வெப்பம் தாங்காமல் அலறிய செல்வராஜை அருகிலிருந்தவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்து மீட்டனர்.

உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் செல்வராஜை அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து உப்பிலியாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞர்... வீடியோ வைரலானதால் ஓராண்டிற்குப் பிறகு கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.