ETV Bharat / state

கத்திமுனையில் காரோடு கடத்தப்பட்ட கட்சி பிரமுகர்!

திருச்சி: திருச்சியில் ரூ.40 லட்சம் கேட்டு கத்திமுனையில் தொழிலதிபரை கடத்திய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடத்தப்பட்ட ராஜா
author img

By

Published : Feb 12, 2019, 10:26 AM IST

திருச்சி கேகே நகர் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற அழகர்சாமி (வயது 45). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் அணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ராஜாவும் அவரது தம்பி ரமேஷ்குமாரும் இணைந்து ரியல் எஸ்டேட், பட்டாசு விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 கார்களில் வந்து வழிமறித்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ராஜாவை அவரது காருடன் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தி சென்றவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வைத்து மிரட்டி, அவரிடமிருந்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளனர். மேலும் ரூ.40 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று கூறி மிரட்டியுள்ளனர். அப்போது அவர்கள் கேட்ட தொகையை தருவதாக அழகர்சாமி ஒத்துக்கொண்டார். இதையடுத்து அந்த கும்பல் ராஜாவை அங்கேயே காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது.

பின்னர் ராஜா அவரது தம்பி ரமேஷ்குமாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததையடுத்து, ரமேஷ்குமார் வேறு கார் மூலம் ராஜாவை மீட்டு திருச்சி கேகே நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மர்ம கும்பல் மீது புகார் அளித்தனர். அந்த புகாரில், தன்னுடன் ஏற்கனவே தொழில் புரிந்து விலகிச் சென்ற சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பட்டாசு ராஜா, அசோக் ஆகியோர் கடந்த வாரம் இது தொடர்பாக மிரட்டல் விடுத்ததாகவும், தன்னைக் கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் இவர்களது பெயர்களை பயன்படுத்தினர் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

undefined

இதனையடுத்து, தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கடத்தல் கும்பலை பிடிக்கக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கேகே நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Intro:ரூ. 40 லட்சம் கேட்டு திருச்சி தொழிலதிபரை கடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Body:குறிப்பு; இதற்கான வீடியோ லவ் மூலம் கொடுக்கப்பட்டது...

திருச்சி: ரூ 40 லட்சம் கேட்டு திருச்சி தொழிலதிபரை கடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி கேகே நகர் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற அழகர்சாமி. வயது 45. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் அணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் தனது தம்பி ரமேஷ் குமார் என்பவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அதோடு பட்டாசு விற்பனை தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் மன்னார் புரத்தில் உள்ள அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் வந்து இவரது காரை வழிமறித்தனர். கத்தி, அரிவாள் ஆகியவற்றை காட்டி மிரட்டி அழகர்சாமியை அவர்களது காரில் கடத்திச் சென்றனர்.
மேலும் இவர் ஓட்டிவந்த காரையும் அந்த கும்பல் ஓட்டிச் சென்றது. அலுவலகத்திலிருந்து இவர் எடுத்து வந்திருந்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் நகைகளை அந்த கும்பல் பறித்துக்கொண்டது. மேலும் ரூ. 40 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று கூறி மிரட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கடத்தல் கும்பல் இவரை கடத்திச் சென்று வைத்து மிரட்டியது. அப்போது அவர்கள் கேட்ட தொகையை தருவதாக அழகர்சாமி ஒத்துக்கொண்டார். இதையடுத்து அந்த கும்பல் அவரை அங்கேயே காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது. பின்னர் இவர் தனது தம்பி ரமேஷ் குமாருக்கு தகவல் கொடுத்து கொடுத்தார். ரமேஷ்குமார் வேறு கார் மூலம் திருச்சியில் இருந்து விராலிமலை சென்று அழகர்சாமியை மீட்டு திருச்சி கே கே நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அங்கு அவர்கள் புகார் செய்தனர். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அதிகாலை 4 மணிவரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் இன்று அதிகாலையில் கேகே நகர் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அழகர்சாமியை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கடத்தல் கும்பலுக்கும் அழகர்சாமியுடன் ஏற்கனவே தொழில் புரிந்து விலகிச் சென்ற சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பட்டாசு ராஜா, அசோக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அழகர்சாமி புகாரில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இது தொடர்பாக அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும், தன்னைக் கடத்திச் சென்றபோது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவர்களது பெயர்களை பயன்படுத்தியதாக அழகர்சாமி போலீசில் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை கடத்தல் கும்பல் அழகர்சாமியை கத்திமுனையில் மிரட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Conclusion:தொழிலதிபரை கடத்தி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று அதிகாலை கேகே நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.