திருச்சி: கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று (பிப்.11) திருச்சி மணப்பாறை ஜமாத் முன்பு திரண்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், சுன்னத்துல் ஜமாத் அமைப்பினர் ஹிஜாப் விவகாரத்தில் ஒன்றிய அரசு, கர்நாடகா அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, உடையும் உணவும் என் உரிமை, அதை தடை செய்ய இல்லை உனக்கு உரிமை, பெண்களின் ஹிஜாப் இறைவன் விதித்த கடமை என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாவி மாணவர்களை பிரிக்க நினைக்கும் அயோக்கிய சக்திகளைக் கண்டிக்கிறோம். மதக் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசிச வெறியர்களைக் கண்டிக்கிறோம் என்ற முழக்கங்களை எழுப்பினர். சுமார் எழுபதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'தங்க முட்டையிடும் வாத்தை வளர்க்கத் தெரியவில்லை' - எல்ஐசி பங்கு விற்பனை குறித்து சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்