ETV Bharat / state

கல்லக்குடி காளைய பிடி!- கல்லக்குடி ஜல்லிக்கட்டு திருவிழா - 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்

திருச்சி மாவட்டம் கல்லக்குடி கிராம கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 6) ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது.

கல்லக்குடி ஜல்லிக்கட்டு திருவிழா
கல்லக்குடி ஜல்லிக்கட்டு திருவிழா
author img

By

Published : Mar 7, 2022, 6:47 AM IST

திருச்சி:திருச்சி மாவட்டம், டால்மியபுரம் அருகே கல்லக்குடியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 5வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்.விழாவில் 450 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு விழாவினை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உறுதிமொழி வாசிக்க, ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர்.விழா காலை 8.55 மணிக்குத் தொடங்கி, மதியம் 4 மணி வரை நடைபெற்றது. தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 450 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

சிறந்த காளைகளுக்கும்., மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு,வெள்ளி காசு, பிரிட்ஜ், பீரோ, டேபிள், சைக்கிள், மின்விசிறி போன்ற ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை விழாக்குழுத் தலைவரும் கல்லக்குடி பேரூராட்சி தலைவருமான பால்துரை உள்ளிட்டோர் வழங்கினர்.

கல்லக்குடி ஜல்லிக்கட்டு திருவிழா

காளைகளை அடக்கிய 15க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது . காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர் .ஜல்லிக்கட்டு விழாவிற்கு லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையிலான 10 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்ஐக்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட காவல்ர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.5 ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்கு லால்குடி அரசு முத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி ஜல்லிக்கட்டில் கட்டுக்கடங்காத காளைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.