ETV Bharat / state

காலதாமதமாக தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு : அமைச்சரால் கிராம மக்கள் ஏமாற்றம் - பொங்கல் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம், நவலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் தொடங்கி வைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த விழா கமிட்டியினர் ஏமாற்றமடைந்து,பின்னர் காலதாமதமாக போட்டியைத் தொடங்கினர்.

காலதாமதமாக துவங்கப்பட்ட ஜல்லிக்கட்டு : அமைச்சரால் கிராம மக்கள் ஏமாற்றம்

author img

By

Published : Jan 18, 2022, 10:01 PM IST

திருச்சி: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ராம்ஜிநகர் அடுத்துள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலதாமதமாக 10:00 மணிக்குத் தான் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.

நூற்றுக்கணக்கான காளைகளுடன் ஜல்லிக்கட்டு:

போட்டியை ஒன்றிய பெருந்தலைவர் கருப்பையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்களை அருகில் விடாமல் விரட்டியடித்தது. மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முடியாமல் தவித்தனர்.

காளைகளை அடக்க முயன்றபோது பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகள் முட்டி தூக்கியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, ப்ரிட்ஜ், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

பார்வையாளர்கள் போட்டியினை நின்று கண்டுகளிக்க சுற்றிலும் இரும்பிலான கேலரி அமைக்கப்பட்டது. மேலும் மாடுபிடி நடைபெறும் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து விடாதபடி 8அடி உயர இரும்பிலான பாதுகாப்பு அரண்கள் மைதானத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன.

காலதாமதமாக துவங்கப்பட்ட ஜல்லிக்கட்டு : அமைச்சரால் கிராம மக்கள் ஏமாற்றம்

அமைச்சரால் ஏமாற்றம்:

மேலும் மாடுகளைப் பாதுகாப்புடன் அழைத்துவர ஏதுவாக இரும்பு மற்றும் மரத்தினால் ஆனத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாடுபிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. உள்ளூர் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்தனர்.

சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்த நிலையில் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டுப்போட்டியை நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைப்பார் என ஆவலாக காத்திருந்து ஊர் விழாக்கமிட்டியினர் கடைசியில் அவர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க:ஊரடங்கில் ஜல்லிக்கட்டு: உதவி ஆய்வாளரை தாக்கிய 9 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.