ETV Bharat / state

'ஓபிஎஸ் சாதியை ஆயுதமாக பயன்படுத்துவது சரியல்ல' - அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார் - ops

'ஓ.பன்னீர்செல்வம் தனது சுயநலத்திற்காக சாதியை ஆயுதமாக பயன்படுத்துகிறார், ஓ.பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் வராது' என திருச்சி அதிமுக முன்னாள் எம்.பி. ப.குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் எம்பி ப.குமார் பேட்டி
அதிமுக முன்னாள் எம்பி ப.குமார் பேட்டி
author img

By

Published : Jun 27, 2022, 4:41 PM IST

திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், 'ஓ.பன்னீர் செல்வம் தான் சார்ந்த சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் அவர் செய்ததில்லை. தற்போது அதிமுகவில் அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த 19 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் 2 பேர் தவிர மற்ற 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி சாதி, மதம் பாராமல் பணியாற்றுவார் என நம்புகிறோம்.

சசிகலா, டிடிவி தினகரன் தொண்டர்களின் ஆதரவை இழந்துவிட்டார்கள். ஓ.பி.எஸ்க்கும் தொண்டர்களின் ஆதரவு இல்லை. ஒட்டு மொத்த தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத் தான் உள்ளது.

வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா சுற்றுப்பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஓ.பன்னீர்செல்வம் தனது சுயநலத்திற்காக சாதியை ஆயுதமாக பயன்படுத்துவது சரியல்ல' எனக் கூறினார்.

அதிமுக முன்னாள் எம்பி ப.குமார் பேட்டி

இதையும் படிங்க: 'முட்டிபோட்டு முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் முதலமைச்சர் ஆக முடியாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.