ETV Bharat / state

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்! - trichy district news

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்!

author img

By

Published : Jun 12, 2021, 1:37 PM IST

திருச்சி: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லட்சத்தீவின் பிரதிநிதி பதவி விலக வேண்டும்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்,

நீண்ட நாள்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும்

ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஆர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில், மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகுது முன்னிலையில் நடைபெற்றது.

இதில், அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா முஹையத்தீன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொன்டு கண்டன உரையாற்றினார்.

இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளிலே சாதி, மத பேதமின்றி அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடித்துவரும் ஒன்றிய அரசு!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.