ETV Bharat / state

"நான் இரவல் ஆளுநர் அல்ல இரக்கம் உள்ள ஆளுநர்" - தமிழிசை சௌந்தரராஜன்

என்னைப் பொறுத்தவரை நான் இரவல் ஆளுநராக பணியாற்றவில்லை, இரக்கம் உள்ள ஆளுநராக பணியாற்றி வருகிறேன் என்று தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

நான் இரவல் ஆளுநர் அல்ல இரக்கமுள்ள ஆளுநர் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

author img

By

Published : Mar 10, 2023, 4:09 PM IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் உலக மகளிர் தின விழாவில் பங்கேற்க தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

அப்போது தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”புதுச்சேரி மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது மிகவும் பெருமையான விஷயம். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை நானும் முதலமைச்சரும் முக்கிய அதிகாரிகளோடு ஒன்றிணைந்து ஆலோசனை செய்து உருவாக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம் பல விஷயங்களில் முன்னேறி வருகிறது. அதற்கு இந்த பட்ஜெட் ஒரு முன் உதாரணம். என்னை இரவல் ஆளுநர் என்று சொல்கின்றனர். இந்த இரவல் ஆளுநர்தான் முழு நேர பட்ஜெட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

இந்த இரவல் ஆளுநர் தான் மக்களை சந்தித்துள்ளேன், இரவல் ஆளுநர் தான் கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானாவில் இருந்து கொண்டு வந்து அளித்துள்ளேன். குறிப்பாக அங்கன்வாடி பயிலும் குழந்தைகளுக்கு மூன்று வேளையும் முட்டைகள் கொடுக்க ஏற்பாடு செய்தேன். இந்த இரவல் ஆளுநர் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் இரவல் ஆளுநராக பணியாற்ற வில்லை இரக்கம் உள்ள ஆளுநராக பணியாற்றி இருக்கிறேன்.

ஒரு காலத்தில் சூப்பர் முதலமைச்சர் என்று கூறினார்கள். தற்போது இரவல் ஆளுநர் என்று கூறுகிறார்கள் என்னை பொறுத்தவரை இரக்கமுள்ள ஆளுநராக மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். முழு நேர உரையை தெளிவாக தமிழில் வாசித்த பிறகு பாஜகவினர் மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சகோதரர்களும் என்னை பாராட்டினார்கள். கட்சி வேறுபாடு இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஆகையால் புதுச்சேரி ஆளுநர் இரவல் ஆளுநர் அல்ல இரக்கம் உள்ள ஆளுநர், கடுமையாக உழைக்கும் ஆளுநர், புதுச்சேரி மாநிலத்தை முன்னேற்ற துடிக்கும் ஆளுநர் ஆகும். இன்று காலை சமூக ஊடகம் மற்றும் டிவிட்டரில் நீங்கள் ஏன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்கிறீர்கள், நீங்கள் ஏன் தேசிய தொழில்நுட்ப கழகம் செல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்?

நான் ஒரு பெண்ணாக மகளிர் தின விழாவில் பங்கேற்க வருகிறேன். தமிழ்நாட்டிற்குள் தமிழிசை வருவதை யாராலும் தடுக்க முடியாது. என்னை வேண்டும் என்றாலும் சரி, வேண்டாம் என்றாலும் சரி, சமூக வலைத்தளங்களில் திட்டினாலும் சரி, தமிழிசை தமிழ்நாட்டிற்கு வருவேன், வந்து கொண்டு தான் இருப்பேன், அதை யாராலும் தடுக்க முடியாது” என பேசினார்

இதையும் படிங்க: குமார வயலூர் கோவில் அர்ச்சகர் நியமனம் ரத்து.. தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.