திருச்சி: துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி சென்ற லாரியும், தூத்துக்குடியிலிருந்து காற்றாலை ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதனையடுத்து இரு லாரிகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதில் லாரி ஓட்டுனர் இந்திராமணிபால் மற்றும் கிளீனர் பவன்பட்டேலும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்தால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'பெண்களின் கனவு கணவனே சூர்யா' - வைரலாகும் சர்ச்சைக்குரிய பேனர்!