மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்திவருவதாக நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நடத்திய தீவிர சோதனையில், ஹக்கீம் என்ற பயணி தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதேபோல், துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் நாகூர், அராபத் என்ற இரு பயணிகள் தங்கம் கடத்தி வந்தது நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூன்று பேரும் தங்கத்தை பசையில் மறைத்து கடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவேறு விமானங்களில் தங்கம் கடத்தி வந்த மூன்று பேரையும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர். மேலும், இந்த மூன்று பேருக்கும் இடையில் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 41.5 லட்சமாகும்.