திருச்சி: மணப்பாறை மோர்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் நேற்று (டிசம்பர் 20) மணப்பாறை காவல் துறையினர் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த வினோத் குமார் (30), விஜய் (22), தர்மராஜ் (27), குமார் (48) உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் தோட்டத்தில் போலி உரம் தயாரிப்பு