திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் குத்தாலிங்கம் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கடந்த ஒரு வாரமாக, மணப்பாறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த சதீஷ் (27), அஜித் (21), விஜய் (22) மற்றும் தர்மராஜ் (27) ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்த 3 கிலோ 300 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அதே பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை அம்மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.