திருச்சி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட மூன்று வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர் தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும், மற்ற நாள்களில் அவர் ஓய்வில் இருக்கிறார்.
இவரைக்காண, தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான அதிமுக முக்கியப் பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவற்றை வீடியோவாக தொகுத்து எம்.ஜி.ஆரின் பாடலைக்கோர்வை செய்து தினமும் அவருடைய ஐடி விங் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பாடல்கள் அனைத்தையும் ஜெயக்குமாரே செலக்ட் செய்து கொடுப்பதோடு, இந்தப்படத்தில் வரும் என சரியாக நினைவில் வைத்திருந்து சொல்கிறாராம்.
’அவரைக் காணவரும் முக்கியப் பிரமுகர்கள் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டாம் அண்ணே... தினமும் ஒரு ஊருக்கு போய் தொண்டர்களின் வீட்டில் சாப்பிடலாமே...’என ஐடியா கொடுக்கிறார்களாம்.
ஆகவே, ஜெயக்குமார் இனி தொண்டர்களை நோக்கி செல்ல முடிவு எடுத்திருக்கிறாராம். திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளையும் இழந்து தவிக்கும் தொண்டர்களுக்கு மருந்தாக இப்பயணம் அமையும் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க: பிரபல ரவுடி 'நீராவி' முருகன் என்கவுன்ட்டர் : சிங்கம் சூர்யா பாணியில் செயல்படும் உதவி ஆய்வாளர்