ETV Bharat / state

பணி வழங்குங்கள் - முதல் பெண் ஓதுவார் கோரிக்கை - re employ for the priest job

ஊதியம் குறைவு என்பதால் ஓதுவார் பணியை கைவிட்ட திருச்சியைச் சேர்ந்த முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி தனக்கு மீண்டும் பணி வாய்ப்பு கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ளனக
னக
author img

By

Published : Aug 17, 2021, 7:47 AM IST

திருச்சி: செம்பட்டு அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி. இவர் சிறு வயது முதலே செம்பட்டு அங்காளம்மன் கோயிலில் பக்திப் பாடல்களைப் பாடி வந்தார். அதன் பின்னர் திருச்சி அரசு இசைப் பள்ளியில் திருமுறைகள் குறித்து படித்தார்.

தேவாரம், திருவாசகப் பாடல்களை மனமுருகப் பாடி பலரது பாராட்டுகளை பெற்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து ஓதுவார் பணி கேட்டு இந்து சமய அறநிலையத் துறைக்கு விண்ணப்பித்தார். அதன்படி திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் ஓதுவாராக 2006ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டார்.

முதல் பெண் ஓதுவாராக பணி நியமனம் செய்யப்பட்ட அங்கையற்கண்ணிக்கு மாதம் ரூ.1,500 ஊதியம் வழங்கப்பட்டது. குறைந்த ஊதியத்தை கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. கோயிலில் பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது ஆனால் தனக்கு வழங்கப்படவில்லை.

ஊதிய உயர்வு கேட்டு பல முறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை, திருமணம், குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களால் நாமக்கல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஓதுவார் பணியை தொடர முடியாமல் 2013ஆம் ஆண்டு அதனை கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் பணி வழங்க கோரிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில் ஓதுவார் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டாமல் இருந்தது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து சாதியினரும் அர்ச்சகரகலாம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

அதன்படி சமீபத்தில் இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிலையில் முதல் பெண் ஓதுவார் அங்கையற்கண்ணி தனக்கு மீண்டும் பணி வழங்க கோரி தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்துள்ளார். அரசு இசைப் பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கு வயது வரம்பைத் தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.