ETV Bharat / state

’3ஆவது அலையே வந்தாலும் அதை அரசு எதிர்க்கொள்ளும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : May 21, 2021, 4:48 PM IST

திருச்சி: கரோனா மூன்றாவது அலையே வந்தாலும் அதை தமிழ்நாடு அரசு எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிவுள்ளார்.

மூன்றாவது அலையே வந்தாலும் அதை அரசு எதிர்க்கொள்ளும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முன்னதாக, நேற்று (மே.20) மாலை மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு உள்ளிட்டோர் மக்கள் நலப்பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, மருத்துவமனை முதன்மை மருத்துவர் முத்து கார்த்திகேயன், மருத்துவ அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கரோனா மூன்றாவது அலையே வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான கட்டமைப்புகளில் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. கரோனா தொற்றுக்கான மருந்தினை தமிழ்நாட்டிலேயே ஏன் உற்பத்தி செய்யக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

புதிய கல்விக்கொள்கை - ஒருமித்த கருத்து

புதிய கல்விக்கொள்கையில் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றன. சிலர் முழுமையாக எதிர்த்து வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படும்போது, அதைப் பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்.

மத்திய அரசிடமிருந்து நாள் ஒன்றுக்கு ஏழாயிரம் ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்படுகிறது. அதை அதிகப்படுத்தி வழங்க மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இருப்பினும் மாநில அரசால் முடிந்த அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.

இந்த ஆய்வின் போது மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் எம். லஜபதிராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) க.முத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.