ETV Bharat / state

திருச்சியை உலுக்கிய 8 பேர் கொலை வழக்கு; சைக்கோ கொலைகாரன் சப்பாணிக்கு வாழ்நாள் சிறை!

பணம், நகைக்கு ஆசைப்பட்டு திருச்சியில் 8 பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2023, 7:43 PM IST

குற்றவாளி சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை

திருச்சி: திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்தவர், சப்பாணி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரை சேர்ந்த தங்கதுரை மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தேக்கன், விஜய் விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்து புதைத்தார்.

திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்பாணியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சப்பாணி கொலை செய்தவர்களின் உடல்களை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைத்ததாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து அவரை அழைத்துச் சென்ற போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து, அதே இடத்திலேயே மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மீண்டும் புதைக்கப்பட்டன. சப்பாணி ஒவ்வொருவரிடமும் நட்பாகப் பேசி அவர்களை தனியாக அழைத்துச் சென்று யாரும் பார்க்காத நேரத்தில் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியது தெரிய வந்தது.

மேலும், அன்றைய காலகட்டத்தில் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 1ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சப்பாணியை திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி கே.பாபு வழக்கின் தீர்ப்பை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் இன்று காலை முதல் தீவிர விசாரணை நடத்திய நீதிபதி கே.பாபு, இந்த கொலை வழக்கின் குற்றவாளி என சப்பாணியை உறுதி செய்தார்.

மேலும் 8 பேரை கொலை செய்த சப்பாணி மீது 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 364, 394 இரு பிரிவுகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, மற்றொரு 201 பிரிவுக்கு 3 சிறை தண்டனை, நான்காவது பிரிவான 302 வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.