ETV Bharat / state

ஜெ., எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு - திமுக குற்றச்சாட்டு! - உள்ளாட்சித் தேர்தல் கே என் நேரு பரப்புரை

திருச்சி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு ஆதரவளித்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்று கே.என். நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்.

trichy election campaign kn nehru  திருச்சி கே என் நேரு தேர்தல் பரப்புரை  ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி ஆதரவு  jayalalitha  edapdi palanisamy  உள்ளாட்சித் தேர்தல் கே என் நேரு பரப்புரை  முசுறி வெள்ளூர்
ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு: கே.என். நேரு குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 24, 2019, 4:43 PM IST

உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முசிறி அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி ஆதரவளித்து ஆட்சியை காப்பாற்றுவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களுக்கு தற்போது ஆதரவளித்து கொண்டிருக்கிறார். உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது எண்ணற்ற வசதிகளை செய்துகொடுத்தார்.

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு: கே.என். நேரு குற்றச்சாட்டு

தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள வேலுமணி சிறப்பான முறையில் பணியாற்றவில்லை. தமிழ்நாட்டில் வருங்காலத்தில் நல்லதொரு ஆட்சி அமைய வேண்டுமென்றால் சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியம். அதற்கு முன்னதாக தற்போது நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலும் முக்கியம்.

உள்ளாட்சி அமைப்பு வலுவாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் வருங்காலத்தில் நல்லதொரு ஆட்சியமைக்க முடியும். எனவே, திமுக, அதன் கூட்டணி சார்ந்த வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

Intro:ஜெயலலிதா எதிர்த்த மத்தியஅரசின் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து ஆட்சியை காப்பாற்றி கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் நேரு பேசினார்.Body:
திருச்சி;

ஜெயலலிதா எதிர்த்த மத்தியஅரசின் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து ஆட்சியை காப்பாற்றி கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் நேரு பேசினார்.

திருச்சி மாவட்டம், முசிறி பகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். முசிறி அருகே உள்ள வெள்ளுர் கிராமத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது ஜெயலலிதா எதிர்த்த மத்தியஅரசு திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து தனது ஆட்சியை காப்பாற்றி கொண்டிருக்கிறார். உள்ளாட்சி துறைஅமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது கிராமங்களுக்கு எண்ணற்ற வசதிகளை செய்து கொடுத்தார். தற்போது உள்ளாட்சி துறை அமைச்சராக உள்ள வேலுமணி சிறப்பான முறையில் பணியாற்ற வில்லை என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய கே.என்.நேரு தமிழகத்தில் வரும்காலத்தில் நல்லதொரு ஆட்சி அமைய வேண்டுமானால் சட்டமன்ற தேர்தல் முக்கியம். அதற்கு முன்னதாக தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலும் முக்கியம். உள்ளாட்சி அமைப்பு வலுவாக இருந்தால்தான் தமிழகத்திற்கு வரும்காலத்தில் நல்லதொரு ஆட்சி அமைக்கமுடியும். எனவே திமுக மற்றும் கூட்டணி சார்ந்த வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்கவேண்டும் என்று பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.