திருச்சி: உலகை அச்சுறுத்தும் கரோனா இரண்டாம் அலையில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர் எனப் பலரும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பெரும்பணியாற்றியுள்ளனர்.
மேலும் கரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 1,427 மருத்துவர்களும், தமிழ்நாட்டில் 42 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கரோனா தொற்றால் நோயாளிகள் உயிரிழக்கும்போது, மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
மருத்துவர்களின் கோரிக்கை:
- மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருத்துவமனை, மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
- மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
- மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் பிணையில் வரமுடியாதவாறு கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்.
- தாக்குவோர் மீது 15 நாட்களில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம்:
மெற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புப் பட்டை அணிந்து, நோயாளிகளுக்கு இடையூறு அளிக்காதவாறு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் உள்ள இந்திய மருத்துவக் கழக வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மருத்துவர்கள் தாக்கியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கறுப்புப் பட்டை அணிந்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: 'ஒரே மேடை.. இரு காதலிகளுடன் திருமணம்..' - சாமர்த்தியசாலியான 90’ஸ் கிட்ஸ்