திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் க. அன்பழகனின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ், முத்துச்செல்வம், டோல்கேட் சுப்பிரமணி, வழக்கறிஞர் பாஸ்கர், பகுதி செயலாளர் இளங்கோ, நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... ‘பேராசிரியருக்கு நானும் மகன்தான்’ - படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் உருக்கம்