திருச்சி மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாநகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதற்குத் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமை வகித்தார்.
அந்தக் கூட்டத்தில் அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதையடுத்து கரோனா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில், "கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் வழங்கும் நாளாக கொண்டாட வேண்டும். மேலும் மூத்தக் கட்சியினருக்கு ஆடைகள், உணவுப் பொருள்களை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், செயற்குழு உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா நடவடிக்கைகள் தொடர்பாக திமுக எம்எல்ஏ சரமாரி கேள்வி!