ETV Bharat / state

திருச்சியில் தீபாவளி திருடர்களை கண்காணிக்க கேமரா கோபுரம்!

திருச்சி: தீபாவளி பண்டிகையில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்களைக் கண்காணிக்க கேமரா கோபுரங்களை காவல் துறை ஆணையர் லோகநாதன் தொடங்கிவைத்தார்.

திருச்சி
திருச்சி
author img

By

Published : Nov 2, 2020, 4:45 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்எஸ்பி ரோடு, பெரியகடைவீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக இப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். இந்த வகையில் என்எஸ்பி ரோடு-நந்தி கோயில் தெரு சந்திப்பு பகுதியில் புதிய புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் இன்று திறந்துவைத்தார். மேலும் பிரத்யேக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் அவர் இயக்கி வைத்தார்.

திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான கோட்டை காவல் நிலையம், மலைக்கோட்டை காவல் நிலையத்திற்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆணையர் லோகநாதன் கூறுகையில்,“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர் கோட்டை, காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பிற்காக 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்திரம் பேருந்து நிலையம் முதல் மலைக்கோட்டைவரை பல்வேறு பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இரண்டு இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க, சாதாரண உடையில் 100 குற்றப்பிரிவு காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 2 துணை ஆணையர்கள் தலைமையில் 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாத விற்பனையாளர்கள், பொதுமக்களுக்கு முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்”என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம், வியாபாரிகள் பலர் கலந்துண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.