ETV Bharat / state

பவர் பேங்க்கில் மறைத்து நூதன முறையில் கரன்சி கடத்தல்.. பலே 'குருவி' சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 6:47 PM IST

Trichy airport customs: திருச்சி விமான நிலையத்தில் பவர் பேங்க் சார்ஜரில் மறைத்து கடத்தி செல்லப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பவர்பேங்க் மறைத்து கடத்தி செல்லப்பட்ட ரியால் பறிமுதல்

திருச்சி: சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகளில் இருந்து, விமானம் மூலம் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் திருச்சியிலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமான நிலையத்தில் புறப்பட தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவர் நூதன முறையில் கரன்சிகளை கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்த போது, செல்போன் சார்ஜர் மற்றும் பவர் பேங்க்-களில் சோதனை நடத்தியுள்ளனர்‌. அதில் சவுதி ரியால்களை மடித்து உள்ளே வைத்து கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. பின்னர், அவரிடமிருந்து சவுதி அரேபியா 50,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும் என சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த நோக்கத்திற்காக பவர் பேங்க் சார்ஜரில் சட்ட விரோதமாக வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்தார் என்றும், அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா என்றும் இவர் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளதா?, என்றும் இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் என பலவகை அரிய உயிரினங்களை பிற நாட்டுக்கோ அல்லது இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கோ கடத்தி, சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் 'குருவி' என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 6 மாத விண்வெளி ஆராய்ச்சி நிறைவு! சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.