திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன்,
ஸ்டாலின் குமார், அப்துல் சமது, இனிகோ இருதயராஜ், கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி,
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அருண், மாவட்ட கண்காணிப்பாளர் மயில் வாகனம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார்,சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தமிழ்நாட்டில் முன் களப்பணியாளர்களின் இறப்புத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, முன்களப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு விரைந்து உறுதி செய்திடும்.
பொதுமக்களுக்கு ஊரடங்கு காலத்தில் விழிப்புணர்வு மூலம் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளவும், வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி - 995 ரூபாய்க்கு விற்பனை!