கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மக்கள் அதிகம் கூடுவதால் கரோனா விழிப்புணர்வு பரப்புரைகள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த வகையில் திருச்சியில் இன்று (நவ. 18) மகளிர் சிறைத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில் உள்ள மகளிர் சிறையில் தொடங்கியது. பிரபாத் தியேட்டர் பாலக்கரை ரவுண்டானா, சப் ஜெயில் ரோடு வழியாக மீண்டும் மகளிர் சிறையில் முடிவடைந்தது. இந்தப் பேரணியை மகளிர் சிறைக் கண்காணிப்பாளர்
ராஜலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான சிறைத் துறை காவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.