ETV Bharat / state

'கூட்டுறவுத் துறை காலியிடங்களை விரைவில் நிரப்புங்கள்..!' - ஊழியர்கள் கோரிக்கை

திருச்சி: "கூட்டுறவுத் துறையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்" என்று, சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

'கூட்டுறவுத் துறை காலியிடங்களை விரைவில் நிரப்புங்கள்
author img

By

Published : Jul 20, 2019, 8:00 PM IST

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் திருச்சியில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையானது விவசாயிகளுக்கு வேளாண்மை கடன்களையும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கக்கூடிய அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

தற்போது எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஏனென்றால் கூட்டுறவுத் துறையில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனை கூட்டுறவுத்துறை பயிற்சி நிலையங்களில் இருந்து விரைவில் நிரப்ப வேண்டும். சுருக்கெழுத்து தட்டசருக்கு நிலை மூன்றுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கால நீட்டிப்பு ஆணை வர தாமதம் ஏற்படுவதால் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. அடிப்படை விதி 127 இன் கீழ் உரிய பணி நீட்டிப்பு ஆணையினை வழங்க கூட்டுறவுச் சங்க பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை!!

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் சலீம் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

Intro:தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.

Body:திருச்சி: கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது
கூட்டத்திற்கு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.
இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார். பொருளாளர் சலீம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநில மையங்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளின் விவாதங்களுக்குப் பிறகு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அடிப்படை விதி 127 இன் கீழ் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கால நீட்டிப்பு ஆணை வர பெறாமல் ஊதியம் பெற முடியாத நிலை உள்ளது. எனவே உரிய பணி நீட்டிப்பு ஆணையினை வழங்க கூட்டுறவு சங்க பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய பணிகளை ஏற்கனவே பணியில் உள்ள கள அலுவலர்கள் கூடுதலாக கவனிக்க பதிவாளர் பதிவாளரால் அறிவுறுத்தப்பட்டது. அதனை மாற்றி புதிய பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு தேர்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்பு கொள்ள அலுவலர் பணியிடம் ஒன்று உருவாக்கித் தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் தர்மபுரியில் நடக்கும் 14 வது மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவையின் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Conclusion:ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் 14 வது மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் தர்மபுரியில் நடைபெறுகிறது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.