திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரில் உள்ள வைஜெயந்தி வித்யாலயா பள்ளியில் நடந்த இதன் தொடக்க விழாவில் அப்பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் இயக்குநர் ராம்கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் .
இந்தத் திட்டத்தின் மூலம் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கணினி சார்ந்த தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் முடிவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருச்சியில் ஒரு சில பள்ளிகளில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.