திருச்சி: துறையூர் வட்டம் உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் அதை பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த புகார் மனுவில், "உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளராக இருப்பவர் முத்து செல்வம். இவரது மனைவி ஹேமலதா, உப்பிலியபுரம் சேர்மனாக இருக்கிறார். இவர்கள் கடந்த 19 ஆம் தேதி காலை, உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பழைய டாடா சுமோ வாகனம் ஒன்றை ஏலம் விட இருந்தனர்.
இந்நிலையில் அந்த வாகனத்தை ஏலம் எடுக்க நடராஜன் உட்பட சிலர் ரூ.10,000 மட்டும் முன்பணம் கட்டியிருந்தார்கள். ஆனால் ஏல அதிகாரி தாமதித்து வந்தார். ஏன் என கேட்ட போது, முத்துச்செல்வம் என்ற நபர் ஏலம் விடக்கூடாது எனக் கூறியதாக கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஏலம் எடுக்க நடராஜன் சென்றபோது தன்னை மீறி யார் ஏலம் எடுக்க வந்தீர்கள் என கேட்டு வெளியே வந்த ஒன்றிய செயலாளர் முத்து செல்வமும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாசு, செந்தில், சசிகுமார், ஸ்ரீதர் ஆகியோர் வந்து ஏரியில் 10 அடியில் தோன்றி வைத்துள்ளேன் அதில் உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் இது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகாரை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதை கொடுக்காமல் காவல் நிலையத்தில் காலம் தாழ்த்தினர். அதன் பிறகு விசாரணைக்காக வந்த காவலர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த போது கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் என்று ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை உள்ள சிசிடிவி பதிவுகளையும் முறைகேடாக அழித்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி துறையூர் காவல் ஆய்வாளர் இருவரையும் அழைத்து விசாரித்த போது ஆய்வாளர் இருக்கும் போதே என் ஒரு மீது வழக்கு தொடர்ந்தால் நடராஜன் ஆகிய என் மீது 10 வழக்குகள் போடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் அதற்காக இங்கு வந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் துறையூர் உப்பிலியபுரம் காவல் துறையினர் திமுக ஒன்றிய செயலாளர் முத்து செல்வத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு" - கிருஷ்ணசாமி ஆவேசம்!