ETV Bharat / state

"என் மகனை போலி என்கவுண்டர் செய்யப்போவதாக போலீசார் மிரட்டல்" - கைதியின் தாய் கதறல்!

Police threaten for fake encounter: கோவை மத்திய சிறையில் இருக்கும் தன் மகனை போலீசார் போலி என்கவுன்டர் செய்யப்போவதாக தனக்கு தகவல் கிடைத்து உள்ளதாகவும் தனது மகனை காப்பற்றாக் கோரியும் தாய் தெரிவித்து உள்ளார்.

Police threaten for fake encounter
"என் மகனை போலி என்கவுண்டர் செய்யப்போவதாக போலீசார் மிரட்டல்" - கைதி காளிமுத்துவின் தாய் கதறல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 11:34 AM IST

"என் மகனை போலி என்கவுண்டர் செய்யப்போவதாக போலீசார் மிரட்டல்" - கைதி காளிமுத்துவின் தாய் கதறல்!

திருச்சி: மதுரையை சேர்ந்த ஜெயக்கொடி என்பவர் அவரது வழக்கறிஞர்கள் உடன் திருச்சியில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தனது மகன் வெள்ளகாளி என்ற காளிமுத்து(36) மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

அதில் ஒரு குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் காவல் துறையினர் போலியாக என் மகனை என்கவுண்டர் செய்ய இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சென்ற வாரம் சிறையில் செல்போன் பயன்படுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி என் மகனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர்.

அடிக்கடி என் மகனை வெளி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். மேலும் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது வழியில் தப்ப முயன்றதாகவும், வேறு வழியில்லாமல் காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததாக கூறி வழக்கை முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நாங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து நடக்கின்றோம். ஆனால் காவல்துறையினர் சிலர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார்கள். சென்னை அருகே ஸ்ரீபெரும்புத்தூரில் கிளாய் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வாவை போலியாக என்கவுண்டர் செய்தது போல, என் மகனையும் போலியாக என்கவுண்டர் செய்ய போலீஸ் திட்டமிட்டு உள்ளனர்.

குறிப்பாக எங்களுடைய எதிரிகளிடம் இருந்து காவல்துறையினர் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு என் மகனை என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எனவே என் மகனின் உயிருக்கு எதாவது விபரீதம் ஏற்பட்டால் முழுக்க முழுக்க காவல் துறையும், சிறைக்காவல் துறையும் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனது மகன் உயிரை காப்பாற்ற உதவி செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: போதையில் தகராறு.. நண்பனை கட்டையால் கொடூரமாக தாக்கிய மதுவெறியர் - வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.