ETV Bharat / state

ரத்தத்தில் ஊறிய சாதிவெறி... திருவிழாவையே பார்க்காத ஒடுக்கப்பட்ட மக்கள்! - tamilnadu

திருச்சி: தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் தங்களை 30 ஆண்டுகளாக ஊருக்குள் வரவிடாமல் ஒதுக்கி வைத்துள்ளார்கள் என 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

போராட்டம்
author img

By

Published : Jun 24, 2019, 5:17 PM IST

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ளது அருவாக்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், தங்களின் ஊரைச் சேர்ந்த சக்திவேல், தவசு ஆகியோர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 30 குடும்பத்தினரை கடந்த 30 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், கோயில் திருவிழா, பொங்கல் திருவிழா, விளையாட்டுப் போட்டி, கோலப்போட்டி உட்பட எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு தாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து புகார் தெரிவிக்க வந்த லதா என்ற பெண் கூறுகையில், “நாங்கள் திருவிழா, பொது நிகழ்ச்சி போன்ற எந்த நல்ல விஷயத்திலும் கலந்துகொள்ள முடியவில்லை. திருவிழா என்றால் அவர்களது வீட்டுக்கெல்லாம் விருந்தினர்கள் வருகிறார்கள். எங்களது வீடுகளுக்கு விருந்தினர்களை அழைக்க முடியாமல் அவமானப்பட்டு நிற்கின்றோம். தொடர்ந்து இதுபோன்று புறக்கணித்தால் நாங்கள் மதம் மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்றார்.

மற்றொரு பெண்ணான இந்திராணி என்பவரோ, “எங்களுக்கு மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாங்களும் சாமி கும்பிட வேண்டும் என்ற ஆசையில்தான் கேட்கிறோம். ஆனால் ஆண்டுதோறும் இந்த ஆண்டு வேண்டாம், அடுத்தாண்டு பார்க்கலாம் என்று கூறி தட்டிக் கழிக்கின்றனர். எனது வயதுக்கு நான் இதுவரை திருவிழாவையே பார்த்ததில்லை” என வெதும்புகிறார்.

சாதியக் கொடுமைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இறுதியாக பேசிய பழனிச்சாமி, “நாங்கள் மூன்று தலைமுறைகளாக இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம். எங்களது முன்னோர்கள் செய்த தவறுகளால் நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். சாமி குத்தம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர். இது குறித்து மணிகண்டம் காவல் துறையிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக தற்போது ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் முற்போக்கு மாநிலங்களில் முதன்மையான மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில், இந்த மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா? என்ற கேள்வியே இங்கு பிரதானமாக எழுகிறது.

Intro:திருச்சி அருகே தாழ்த்தப்பட்டப பிரிவை சேர்ந்த 30 குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

Body:திருச்சி:
திருச்சி அருகே தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 30 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ளது அருவாக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
ஆட்சியர் சிவ்ராசு தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அவர்கள் மனு அளித்தனர்.
அதில், தங்களது ஊரைச் சேர்ந்த பட்டயதாரரான சக்திவேல், தவசு ஆகியோர் சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகமான தங்களது சமூகத்தை சேர்ந்த 30 குடும்பத்தினரை கடந்த 30 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.
கோவில் திருவிழா, பொங்கல் திருவிழா, விளையாட்டுப்போட்டி, கோலப்போட்டி உட்பட எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் தங்களை ஒதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் கூறுகையில்,
நாங்கள் திருவிழா, பொது நிகழ்ச்சி போன்று எந்த நல்ல விஷயத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. திருவிழா என்றால் அவர்களது வீட்டுக்கெல்லாம் விருந்தினர்கள் வருகிறார்கள். எங்களது வீடுகளுக்கு விருந்தினர்களை அழைக்க முடியாமல் அவமானப்பட்டு நிற்கின்றோம். தொடர்ந்து இதுபோன்று புறக்கணித்தால் நாங்கள் மதம் மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்.
இதுகுறித்து இந்திராணி என்பவர் கூறுகையில், எங்களுக்கு மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாங்களும் சாமி கும்பிட வேண்டும் என்ற ஆசையில்தான் கேட்கிறோம். ஆனால் ஆண்டுதோறும் இந்த ஆண்டு வேண்டாம் அடுத்தாண்டு பார்க்கலாம் என்று கூறித் தட்டிக் கழிக்கின்றனர். எனது வயதுக்கு நான் இதுவரை திருவிழாவை பார்த்ததில்லை என்றார்.
பழனிச்சாமி என்பவர் கூறுகையில்,
நாங்கள் மூன்று தலைமுறையாக இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம். எங்களது முன்னோர்கள் செய்த தவறுகளால் நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். சாமி குத்தம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இதுகுறித்து மணிகண்டம் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக தற்போது ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

Conclusion:இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் பழனிச்சாமி.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.