திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் இந்தக் கடைகளின் கழிவுகளை கடையின் உரிமையாளர்களில் சிலர் மணப்பாறையைச் சுற்றி உள்ள பிரதான சாலைகளின் ஓரத்தில் வீசி செல்வதாக கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தற்போது இரவு நேரங்களில் கோழி கழிவுகளோடு சேர்த்து இறந்த கோழிகளையும் அப்பகுதியில் கொட்டி செல்கின்றனர்.
கோழி கழிவுகளால் வரும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும், குரங்குகள், மயில்கள் போன்ற வன விலங்குகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சமந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து நோய்த்தொற்று அபாயத்திலிருந்து வன விலங்குகளையும், அப்பகுதி மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் பார்க்க: ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் கைது