ETV Bharat / state

‘திமுகவின் அடக்குமுறைக்கு பாஜக பணிந்து போகாது’ - பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் - திருச்சி வன்முறை

திமுகவின் அடக்குமுறைக்கு பணிந்து போகிற கட்சி பாஜக இல்லை, திமுக என்றாலே வன்முறை கட்சி என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்

author img

By

Published : Apr 22, 2022, 8:00 PM IST

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கண்டெண்ட்மெண்ட் மண்டல தலைவர் பரமசிவம் தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியுடன் மோதல் போக்கை திமுக கட்சி செய்துகொண்டிருக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளாக திமுகவினர் கிளப்பிவிட்ட நரேந்திர மோடி எதிர்ப்பு, சமூக ஊடகங்கள் எப்படிப்பட்ட அவதூறுகளை பதிவிட்டார்கள் என்பது தெரியும். மோடியை பச்சையாகவும், கொச்சையாகவும் அவதூறு பரப்பினார்கள்.

இதையெல்லாம் புகார்கள் மூலமாக அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். திமுக அரசு வந்த பிறகு சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் மீது விமர்சனம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாமல் இதுவரை பாஜக தொண்டர்கள் 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறது திமுக. நான்கு நாள்களுக்கு முன்னதாக ஆளுநர் தர்மபுர ஆதீனத்தை சந்தித்து வரும்போது கறுப்புக்கொடி எறிந்து கலவரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆளுநர் என்பவர் பாஜகவின் அடையாளமல்ல தமிழ்நாட்டில் அடையாளம். இவர் அமைச்சரவைக்கு ஆளுநர் ஆலோசனை சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். திமுக தொடர்ந்து தொண்டர்களை வைத்து பாஜகவை அச்சுறுத்தி பணியவைக்க முயற்சித்தால் திமுக தோற்றுப்போகும்.

பாஜகவை அச்சுறுத்த நினைத்த எந்த மாநிலமும் வெற்றி பெற்றதில்லை மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், கேரளம் ஆளும்கட்சி அச்சுறுத்தல் அராஜகம் தொடர தொடர பாஜக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் மோடி புகைப்படம் வைக்கப்படும்.

திமுகவின் அடக்குமுறைக்கு பணிந்து போகிற கட்சி பாஜக இல்லை. திமுக என்றாலே வன்முறை கட்சி என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. 10 வருடங்கள் ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் இது போன்று இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தாலும் எவ்வளவு விமர்சனம் செய்தாலும் அதை சகிப்புத் தன்மை போக்கு அதிமுகவிடம் இருந்தது திமுக தன்மையில்லாத கட்சியாக மாறியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்

கரோனா தடுப்பூசி ஒன்றிய அரசாங்கம் கொடுக்கிறது. அதில் ஸ்டிக்கர் ஒட்டும் அரசாங்கமாக தமிழ்நாடு அரசு உள்ளது. ஒன்றிய அரசு கொடுக்கும் தடுப்பூசியில் உங்கள் (திமுக) ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளுங்கள்.

ஆனால், மோடியின் புகைப்படத்தை ஓட்டுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் உள்ளது. அதை எடுத்து விட்டு ஏன் ஒட்ட வேண்டும். திமுகவின் பெருந்தன்மை ஆளுநர் மீது வழக்கு போடாதது தான். இந்த அராஜகம் நீண்ட நாள் நீடிக்க கூடாது என திமுகவிற்கு கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: 'நான் உனை நீங்கமாட்டேன்..!' - ட்விட்டரில் இளையராஜா யாரைக் குறிப்பிட்டார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.