ETV Bharat / state

அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் அமைச்சர் சேகர் பாபு - எச்.ராஜா வெளியிட்ட தகவல் - அமலாக்கத்துறை

திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை கடுமையாக விமர்சனம் செய்ததோடு அமலாக்கத்துறை அடுத்ததாக சேகர் பாபு வீட்டில் தான் சோதனை நடத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

author img

By

Published : Aug 9, 2023, 10:37 AM IST

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

திருச்சி: இந்து முன்னணி கட்சி சார்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாகவும், இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதாக திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் நேரு, வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது. இது ஒரு பிரச்சனையா? என கூறி இருக்கிறார்.

என்ன முட்டாள் தனமான பேச்சு, திராவிட மாடல் ஆட்சி இந்து இயக்கத்திற்கும், தேசிய இயக்கத்திற்கும் விரோதமாக செயல்படுவது உறுதியாகி உள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறியவேண்டும். தமிழ்நாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை வேண்டாம். அமைச்சர் சேகர் பாபு ஒரு கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல் செய்பவர், அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும்.தமிழகத்தில் அடுத்த அமலாக்கதுறை சோதனை சேகர் பாபு வீட்டில் தான் நடக்கும். இந்து அறநிலையத்துறைக்கு இந்து வெறியர்கள் தான் அமைச்சராக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “தற்போது தமிழகத்தில் நடப்பது கிரிமினல் ஆட்சி. இந்துக்களுக்கு எதிரான ஆட்சி. ஆகையால் உடனடியாக இதை அகற்ற வேண்டும். குறிப்பாக திருடன் கையில் சாவியை கொடுத்தது போன்று இந்துக்கள் கோயில்களில் உள்ள நகை, பணம், நிலம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவர்களை அடித்து துரத்த வேண்டும். அதுவும் ஓட்டுக்கள் மூலம் நாம் செய்ய வேண்டும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டில் புல்டோசர் ஆட்சி அமையும். அப்போது அவர்கள் அனைவரும் தூக்கி எறியபடுவார்கள். மேலும் கடற்கரையில் எழுதாத பேனாவிற்கு சிலை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் குடி என்றால் என்ன என்று தெரியாமல் மக்கள் இருந்தார்கள்.

ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் மதுபானம் கொண்டுவந்து அனைவரையும் குடிக்காரனாக ஆக்கிவிட்டார்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சி ஆகும். திமுகவில் இலாகா இல்லாத அமைச்சர்கள் பலர் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் செந்தில் பாலாஜி இறந்து 50 நாட்கள் ஆகிவிட்டது என தகவல் வந்தது. அதை பார்த்து நான் பயந்துவிட்டேன்.

ஆனால் நேற்று காவல்துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜியை அழைத்து சென்ற காட்சியை பார்த்த பிறகு தான் அப்பாடா என்று உயிர் வந்தது. மேலும் தமிழ்நாட்டில் ஆளுநர் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஆளுநர் ஒருமுறை இந்த ஆட்சியை பற்றி ஒரு கடிதம் எழுதினால் திமுக ஆட்சி களைந்து விடும்.

மேலும் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடில் இந்துக்களை ஒன்றிணைத்து ஆர்பாட்டம் நடத்தபடும். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கும், இந்துக்களுக்கும் விரோதமான அராஜக ஆட்சி . திராவிட மாடல் இயக்கத்தின் கடைசி சகாப்தம் இது தான்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக அமைச்சர்கள் இன்னும் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது: எச்.ராஜா காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.