திருச்சி: மணப்பாறையில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுவது வழக்கம். இதற்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக பல்லாயிரக்கணக்கான கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இதனால் வழக்கமான நாட்களில் 1 கோடி ரூபாய் வரையும், ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை கால நாட்களில் சந்தையில் வழக்கத்தை விட பல மடங்கு கூடுதலாகவும் வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் (ஏப்ரல் - 21) ரம்ஜான் பண்டிகை கொண்டாப்படவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்திற்கு குறைவான வர்த்தகமே நடைபெற்றது.
அதேபோல், விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வராததால் ஆடுகளுக்கு உரிய விலை கிடைக்காமல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் ரம்ஜான் பண்டிகை காலம் வாரச்சந்தையில் எப்போதும் இறைச்சிக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும் நிலையில், இந்த ஆண்டு இறைச்சி ஆடுகள் விற்பனையும் மந்தமானது.
இதனால் ஆடுகள் வளர்ப்புத்தொழில் செய்து பிழைப்பவர்களும் ஏமாற்றத்துடனேயே திரும்பிச் சென்றனர். வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் ஆடுகள் வியாபாரிகள் வரத்து குறைவால் வர்த்தகம் ஒரு கோடிக்கும் குறைவாகவே நடைபெற்றது.
இதையும் படிங்க: AK62 அப்டேட் வேண்டும்.. திருச்சி அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி!